"அசாருதீன் கேப்டனாக இருந்திருக்கிறார்; அதுதான் இந்தியா" - கவுதம் காம்பீர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc


இந்திய கிரிக்கெட் அணிக்கு பலகாலமாக முகமது அசாருதீன் கேப்டனாக இருந்துள்ளார், அதுதான் நம் நாட்டின் சிறப்பு என்று பாஜக எம்பியும் முன்னாள் கிரிக்கெட் வீரரான கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.


Advertisement

பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா, தான் இந்துவாக இருப்பதால் சக வீரர்கள் என்னுடன் உணவருந்தமாட்டார்கள் என்று தெரிவித்திருந்தார். மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன் வைத்திருந்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த கவுதம் காம்பீர் " இதுதான் பாகிஸ்தானின் உண்மையான முகம். ஆனால், நம் நாட்டில் இந்திய அணிக்கு சிறுபான்மையினராக இருந்தபோதும் முகமது அசாருதீன் பல ஆண்டுகளாக கேப்டனாக இருந்துள்ளார். பாகிஸ்தானுக்கு ஒரு விளையாட்டு வீரர் பிரதமராக இருக்கிறார் என்று சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது" என்றார் அவர்.


Advertisement

Image result for shoaib malik

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா. இந்துவான இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம்பெற்று அந்நாட்டிற்காக விளையாடியவர். இதனிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தார்.

Image result for shoaib aktha


Advertisement

அதாவது டேனிஷ் கனேரியா ஒரு இந்து என்பதால் அவரிடம் சக கிரிக்கெட் வீரர்கள் பாகுபாடு காட்டினர் என தெரிவித்திருந்தார். அத்துடன் சில பாகிஸ்தான் வீரர்கள், டேனிஷ் கனேரியாவுடன் ஒரே டேபிளில் ஒன்றாக உணவருந்த கூட மாட்டார்கள் எனவும் கூறியிருந்தார். டேனிஷ் கனேரியா எவ்வளவுதான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் கூட எந்தவொரு பாராட்டோ, அங்கீகாரமோ கிடைக்காது என்றும் தெரிவித்திருந்தார்.

Image result for danish kaneria

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள டேனிஷ் கனேரியா, “ நான் இந்துவாக இருப்பதால் என்னுடன் சக வீரர்கள் உணவருந்தமாட்டார்கள் என சோயிப் அக்தர் கூறியது உண்மைதான். நான் இந்து என்ற ஒரே காரணத்திற்காக என்னுடன் சில வீரர்கள் பேச மறுத்தனர். அந்த வீரர்கள் குறித்த விவரத்தை வெளிப்படுத்த முன்பு தைரியம் இல்லை. ஆனால் அதனை தற்போது வெளிப்படுத்த தைரியம் இருக்கிறது” எனக் கூறினார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement