உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி விரைவில் வெளியிடப்படும்: மாநில தேர்தல் ஆணையர்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான புதிய தேதி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.


Advertisement

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. தொகுதி மறுவரையறை பணிகளை முழுமையாக முடிக்காமலேயே தேர்தல் அறிவிப்பாணை வெளியாகியுள்ளதால்,அதற்கு தடைவிதிக்க வேண்டும் எனக் கூறி திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.


Advertisement

இந்த வழக்கில்  புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில், தொகுதி மறுவரையறை பணிகளை செய்துவிட்டு 4 மாதங்களில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் தேதி மாற்றப்படும்; புதிய தேர்தல் தேதி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement