3 வீடுகளில் தொடர் கொள்ளை - 8 பைக்குகளின் பெட்ரோல் டியூப்பை அறுத்த கொள்ளையர்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சேலம் தாதகாப்பட்டி பகுதியில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement

சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று இரவு வழக்கம் போல தூங்கச் சென்றுள்ளார். இன்று காலை எழுந்து பார்த்த போது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 40,000 ரூபாய் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனிடையே மணி வீட்டின் பின்புறமாக உள்ள மற்றொரு  வீட்டிலும் பூட்டை உடைத்து 12 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. வீட்டின் உரிமையாளர் சாந்தி என்பவர் ஆன்மீக பயணம் சென்று திரும்பிப் பார்த்த போது இந்தக் கொள்ளை சம்பவம் அரங்கேறி இருப்பது தெரிய வந்தது. 

Image result for கொள்ளை


Advertisement

மேலும் மற்றொரு வீட்டிலும் ஓட்டை பிரித்து வீட்டில் இருந்த டிவிடி பிளேயர் திருடப்பட்டுள்ளது. அடுத்தடுத்து மூன்று வீடுகளில் நடந்துள்ள இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வீடுகளில் கொள்ளை அடித்த நபர்கள் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் ட்யூப்பை துண்டித்து இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

loading...

Advertisement

Advertisement

Advertisement