தேர்வில் குறைந்த மதிப்பெண் - ஆசிரியை அடித்ததில் 24 மாணவர்கள் காயம் ?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கோபிசெட்டிபாளையம் அருகே ஆசிரியை அடித்ததில் 20-க்கும் அதிகமான மாணவர்கள் காயமடைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. 


Advertisement

ஈரோடு மாவட்டம் கூகலூரிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளியில், கணித ஆசிரியையாக பணியாற்றி வருபவர் சிவகாமி. இவர் கணிதத் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் 24 பேரை அடித்ததாக கூறப்படுகிறது. அதில், கை மற்றும் கால்களில் காயமடைந்த மாணவர்களை சக ஆசிரியர்கள் ஆரம்ப சுகாதாரத்திற்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சையளித்தனர். 


Advertisement

தகவலறிந்த பெற்றோர், சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் தங்களை ஆசிரியர் அடித்ததாக மாணவர்கள் கூறினர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement