நாங்குநேரியில் 30 வாக்கு இயந்திரங்கள் இடமாற்றம் - தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முன்னறிவிப்பின்றி மாற்றப்பட்டிருப்பதாக திமுக
சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Advertisement

தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கான தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வருகிறது. இந்நிலையில் நாங்குநேரி சட்டப்பேரவை
இடைத்தேர்தலுக்காக கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முன்னறிவிப்பின்றி‌ நெல்லை மாவட்ட
ஆட்சியர் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு, திமுக சார்பில் புகார்
அளிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த 30 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கடந்த 12ஆம் தேதி
நள்ளிரவு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக புகாரில்‌‌ குறிப்பிடப்பட்டுள்ளது‌.

loading...

Advertisement

Advertisement

Advertisement