“மின்சார கட்டணம் உயர்த்தப்படாது” - அமைச்சர் தங்கமணி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மின்சார வாரியம் நிதி நெருக்கடியில் இருந்தாலும், மின்சார கட்டணம் இப்போதைக்கு உயர்த்தப்படாது என்று தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.


Advertisement

டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், மின்சார வாரியத்தின் நிதிப் பற்றாக்குறை குறித்து முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். புதிய மின் இணைப்புகளுக்கு மட்டுமே கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்ததாகவும் அதிலும் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.


Advertisement

மின்சார வாரியத்தின் நிதிச்சுமை அதிகரித்தாலும் அதை மக்கள் மீது சுமத்த அரசு விரும்பவில்லை என்று கூறிய அமைச்சர், இந்த ஆண்டு மட்டும் மின்வாரியத்துக்கு 7 ஆயிரம் கோடி நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement