மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான 6 பேரின் பதவிக்காலம் ஜுலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இப்பதவிகளுக்கான தேர்தல் வரும் 18 ஆம் தேதி நடைபெறும் நிலையில், வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. சட்டப்பேரவையில் தற்போதுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், ஆளும் அதிமுக சார்பில் 3 பேர்களும், திமுக சார்பில் 3 பேரும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்க முடியும்.
இந்நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. வழக்கறிஞர் பி.வில்சன், தொமுசவை சேர்ந்த சண்முகம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலின் போது ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, மதிமுகவுக்கு ஒரு தொகுதியை வழங்க திமுக முன்வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் காங்கிரஸ் தரப்பில் இருந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போட்டியிட வேண்டி ஒரு சீட் திமுகவிடம் கேட்கப்பட்டு வருவதாகவும் தகவல் கசிந்தது. ஆனால் இவை அனைத்தும் ஊகங்கள் மட்டுமே. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இன்று திமுக வெளியிட்ட பின்பு, அனைத்திற்கும் ஒரு விடை கிடைக்கும்.
Loading More post
திருச்சி: மழைநீரில் மூழ்கி 50,000 ஏக்கர் நெற்பயிர் நாசம்; இழப்பீடு வழங்க கோரிக்கை
’’நான் நிச்சயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன்’’ - முதல்வர் பழனிசாமி
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு