[X] Close >

உலகின் உயரமான முருகனை தரிசக்கணுமா? மலேசியா போகலாம் வாங்க!

malaysian-murugan

இந்திய சுற்றுலாப் பயணிகளில், குறிப்பாக தென்னிந்திய சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ள பகுதி மலேசியா.


Advertisement

கோலாலம்பூரை தலைநகராக கொண்ட மலேசியா, வரலாற்றுப் பதிவுகள் நிறைந்த தலங்கள், அற்புதமான காட்சியமைப்புகள், வண்ணமயமான கடற்கரைகள் மற்றும் தீவுகள் என சுற்றுலா பயணிகளை பிரமிப்படைய செய்கிறது.

மலேசியாவிற்கு விமானம் மூலம் செல்லலாம். விமானத்தில் சென்னை மற்றும் திருச்சியிலிருந்து நான்கு மணிநேரத்தில் சென்றுவிடலாம். மலேசியா செல்வதற்கான பயணச் செலவுகளை கணக்கிட்டால் 5லிருந்து 6 நாட்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதி உட்பட ரூ25,000 முதல் ரூ32,000 வரை செலவாகலாம்.


Advertisement

விமான டிக்கெட் விலையை பொருத்தவரை, தற்போது கோடை விடுமுறை என்பதால் தனி நபர் ஒருவருக்கு ரூ.9000 முதல் ரூ.16,500 வரை வசூலிக்கப்படுகிறது. ஆனால் ஒரு மாத காலத்திற்கு முன்னரே முன் பதிவு செய்தால் 7,000 ரூபாய்க்கும் குறவான விலையில் பயணம் செய்யலாம்.

மலேசியா சென்ற பிறகு பார்க்க வேண்டிய முக்கிய இடம், கோலாலம்பூர். இது மலேசியாவின் தலைநகர், பரப்பளவில் மிகப்பெரிய நகரம். இங்கு திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள வானுயர்ந்த கட்டிடங்கள், வர்த்தக நிறுவனங்கள் போன்றவை, சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்திழுக்கக் கூடியவை.

கோலாலம்பூர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மலேசியாவிற்கே அடையாளச் சின்னமாக இருக்கும் பெட்ரோனாஸ் உலகிலேயே மிக உயரமான இரட்டைக் கோபுரமாக நிமிர்ந்து பார்க்க வைக்கிறது. பத்துமலை என்பது மலேசியாவில் உள்ள ஒரு குகைக் கோவில், இந்தக் கோவிலில் உள்ள முருகன் சிலை உலகிலேயே மிக உயரமான சிலை என்ற பெயருடன் சிறப்புமிக்கதாக உள்ளது. இதுமட்டுமல்லாமல் பிரமிக்கத்தக்க வகையில் வசீகரங்களின் தேசமாக உள்ள மலேசியா சுற்றுலா பயணிகளை வண்ணமயமாக வரவேற்கிறது.


Advertisement
Related Tags : malaysia muruganmalaysia murugan
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close