“பயப்படுவோம் என தப்புக்கணக்கு போட்டுவிட்டார்கள்” - துரைமுருகன் பேட்டி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மூத்த நிர்வாகி வீட்டிலேயே சோதனை நடத்தினால் கட்சியில் அனைவரும் பயந்துவிடுவார்கள் என தப்புக்கணக்கு போட்டுவிட்டதாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.


Advertisement

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனது இல்லத்தில் துரைமுருகன் செய்தியாளர்களை சந்திதார். அப்போது வருமான வரித்துறை நடத்திய சோதனை தொடர்பாக பேசிய அவர், “3 நாட்களாக என் மகன் வாக்கு கேட்பதை தடுத்துள்ளனர். இப்படி தடுப்பதால் நாங்களெல்லாம் மனச்சோர்வு அடைந்துவிடுவோம், ஆகையால் எங்களை எளிதாக வெற்றி பெறலாம் என்ற ஒரே அரசியல் நோக்கத்திற்கு தான் இந்தச் சோதனை. இது முழுக்க முழுக்க அரசியல். இந்த நேரத்தில் எங்கள் தலைவர் (மு.கருணாநிதி) இல்லையென்றாலும், அதே இடத்திடல் தளபதி (ஸ்டாலின்) இருந்து ஆறுதல் சொல்லி வருகிறார். வந்தார்கள், கேட்டார்கள், எங்களுக்கு சம்பந்தம் இல்லை என்றோம். சரி என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள். 

               


Advertisement

எப்படியும் கதிர் ஆனந்த் வெற்றி பெறக்கூடாது. இந்த மாவட்டத்தில் 2 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் இருக்கிறது அதையும் நிறுத்த நினைக்கிறார்கள். கட்சியின் மூத்த நிர்வாகி வீட்டிலேயே சோதனை நடத்தினால், மற்றவர்கள் பயந்துவிடுவார்கள் என்று தப்பு கணக்கு போட்டுள்ளனர். இதனை மத்திய, மாநில மற்றும் அதற்கு துணை கட்சிகள் செய்துள்ளன. திமுகவின் வெற்றியை தடுப்பதற்காக இன்று துரைமுருகன் வீடு, அனிதா ராதாகிருஷ்ணன் வீடு நாளை ஒருவர் வீடு என சோதனை நடத்துவார்கள். ஆனால் இது மக்களிடம் என்ன மனநிலையை ஏற்படுத்தும் என்பதை அறியாமல், அரசியல் அரிச்சுவடு கூட தெரியாமல் அவர்கள் செய்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement