தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலையொட்டி திமுக, அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அமமுக துணை பொதுச்செயளாலர் டிடிவி தினகரன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அமமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ள.
* கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றம் செய்யப்படும். அதற்கு அமமுக பாடுபடும்; அப்படி மாற்றுவதால் மத்திய அரசால் கிடைக்கக்கூடிய நிதி உதவிகள் தடைபடாமல் பார்த்துக்கொள்ளவும் கவனம் செலுத்துவோம்.
* தமிழகத்தை 6 மண்டலமாக பிரித்து தொழில் பூங்கா உருவாக்கப்படும்
* நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வலியுறுத்தப்படும்.
* விவசாயத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும், தொழிற்சாலையையும் டெல்டா மாவட்டங்களில் அமைக்க நிரந்தர தடை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
* 60 வயது முதிர்ந்த ஆண், பெண், விவசாய தொழிலாளர்கள், நெசவாளர்களுக்கு மாதம் ரூ. 4000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும்.
* முதியோருக்கான மாத உதவித்தொகை ரூ.1000த்திலிருந்து ரூ.2000ஆக உயர்த்தப்படும்.
* தமிழகத்தில் இனிமேல் மதுபான உற்பத்தி ஆலைக்கு அனுமதி இல்லை, கொள்கை முடிவு எடுக்கப்படும்
* 7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
* மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்; நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்
* பொறியியல் பட்டதாரிகளுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்படும்; மாணவர்கள் நல ஆணையம் அமைக்கப்படம்
* பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்க, கண்காணிக்க தனி ஆணையம் ஏற்படுத்தப்படும்.
* வெளிநாடு தமிழர்கள் பிரச்சனையை தீர்க்க தனி வாரியம் சென்னையில் செயல்படுத்தப்படும்.
* 6 முதல் முதுகலை பட்டம் வரை படிக்கும் மாணவர்களுக்கு சானிடரி நாப்கின் வழங்கப்படும்.
* 385 ஊராட்சிகளில் அம்மா கிராமப்புர வங்கி
* காவலர்கள் தற்கொலை தடுக்க மாவட்ட வாரியாக உளவியல் நிபுணர்களை கொண்டு தனி குழு அமைக்கப்படும்.
* கச்சதீவு திரும்ப பெற அமமுக பாடுபடும்.
Loading More post
''எந்தக் கட்சியிலும் சேரலாம் என ரஜினி கூறியதே போதும்'' - கமல்ஹாசன்
புதுச்சேரி: நமச்சிவாயம் உட்பட இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா!
புதுச்சேரி: காங்கிரசில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம்!
கண்ணை மறைத்த மூடநம்பிக்கை: இரு மகள்களை நிர்வாணப்படுத்தி நரபலி பூஜை செய்த பெற்றோர்!
“சீனா என்ற வார்த்தையை சொல்லக்கூட தைரியமற்றவர் பிரதமர் மோடி” - ராகுல் காந்தி
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!