திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு ஏ.ஆர்.ரகுமான் இரங்கல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை காவேரி மருத்துவமனையில் 10 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தார் கருணாநிதி. இந்நிலையில் இன்று மாலை 6.10 மணிக்கு சிகிச்சை பலனின்றி கருணாநிதி உயிரிழந்தார். கருணாநிதியின் மறைவுக்கு தமிழக, தேசிய தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எனப் பலரும் கருணாநிதியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பின்னர் கருணாநிதியின் உடல் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து சிஐடி காலனி இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. தற்போது கட்சி நிர்வாகிகள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டர் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் “பூமியை விட்டு நீங்கள் சென்றிருக்கலாம். ஆனால் தமிழ் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு என்றும் நிலைத்திருக்கும்” என்று தெரிவித்துள்ளார். இதே போல் கமல் பதிவிட்டுள்ள ட்வீட்டில், அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி மூவரையும் ஒரே இடத்தில் வைத்து மரியாதை செய்வதே மாண்பு எனத் தெரிவித்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement