ஆந்திர திரையுலகில் தொடரும் பாலியல் புகார்கள்

Hyderabad-cops-rescue-Bhojpuri-actress-in--high-profile--sex-racket

ஒப்பந்த அடிப்படையில் இளம் நடிகையை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 3 பேர் ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Advertisement

பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவில் தெலுங்கு சினிமா நிகழ்ச்சிகளுக்கு நடிகைகளை அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தெலுங்கு பட தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே நடிகை ஸ்ரீரெட்டி சினிமாத்துறையினர் மீது பரபரப்பு பாலியல் புகாரை கூறி வருகிறார். 


Advertisement

இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்தப் பகுதியில் ஏராளமான சினிமா துறையினர் வசிக்கின்றனர். இதையடுத்து போலீசார் நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு சென்று நேற்று முன் தினம் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த இளம்பெண்ணும் வாடிக்கை யாளர் ஒருவரும் சிக்கினர். போலீசார் அந்தப் பெண்ணிடம் விசாரித்தபோது அவர் போஜ்புரி படங்களில் நடித்து வரும் இளம் நடிகை என்று தெரிய வந்தது. 

வாரம் ஒரு லட்சம் ரூபாய் தருவதாகக் கூறி ஒப்பந்த அடிப்படையில் அழைத்து வந்ததாகவும், பாலியல் தொழிலில் ஜனார்த்தன ராவ், பிரசாந்த் ஆகியோர் ஈடுபடுத்தியதாகவும் புகார் எழுந்தது. அவர்கள் வாடிக்கையாளர்களிடம் ரூ.10 ஆயிரம், ரூ. 20 ஆயிரம் என பறித்துள்ளனர். இதையடுத்து ஜனார்த்தன ராவையும் வாடிக்கையாளரான மகேந்திர சர்மா என்ற அரசு ஊழியரையும் போலீசார் கைது செய்தனர். பிரசாந்த் தப்பியோடி விட்டார். மீட்கப்பட்ட நடிகை பற்றிய விவரங்களை தெரிவிக்க, போலீசார் மறுத்து விட்டனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement