பாலிவுட் படத்தில் நடிகை வேதிகா நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
‘பரதேசி’ படத்தின் மூலம் அதிகமாக பேசப்பட்டவர் நடிகை வேதிகா. அந்தப் படத்தில் அழகான வேதிகாவை அழுக்காக காட்டி இருந்தார் இயக்குநர் பாலா. நல்ல நடிகை என அவருக்கு பெயர் கிடைத்திருந்தாலும் அவருக்கு தொடர்ந்து தமிழில் வாய்ப்புக்கள் ஏதும் அமையவில்லை. ஆகவே அவர் தெலுங்கு பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதிலும் அவருக்கு அதிக வாய்ப்புக்கள் வந்துவிடவில்லை.
இந்நிலையில்தான் நடிகை வேதிகா பாலிவுட் படத்தில் அறிமுகமாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இம்ரான் ஹாஷிமி நடிக்க உள்ள படத்தில் வேதிகா நடிக்க உள்ளார். இந்தப் படத்தை ஜீது ஜோசப் இயக்க இருக்கிறார். இது தொடர்பாக வேதிகா, “நான் பெரிய எதிர்பார்ப்போடு இருக்கிறேன். இயக்குநர் ஜீது ஜோசப்பிற்கு நான் இந்த வாய்ப்புக்காக நன்றி கூறிக் கொள்கிறேன். என்னால் இந்தப் படத்தில் நடிப்பதற்கான தருணத்திற்காக பொறுத்திருக்க முயவில்லை. இம்ரான் ஒரு அற்புதமான நடிகர். அவரோடு இணைந்து பணியாற்றுவது என்னை இன்னும் ஒருபடி முன்னே கொண்டு செல்லும்” என்று கூறியிருக்கிறார். இம்ரான் பாலிவுட் உலகில் ஒரு மினி கமல்ஹாசன். அவரது படங்களில் லிப் லாக் காட்சிகள் வெகு பிரபலம். அதற்காகவே அவரது புகழ் பாலிவுட்டில் உச்சத்தில் நிற்கிறது.
Loading More post
ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்: ஓபிஎஸ் - வீடியோ
சசிகலா விடுதலையை கொண்டாடவே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு - டிடிவி தினகரன்
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
சீர்காழி: 2 பேரை கொன்றுவிட்டு நகை கொள்ளை - கொள்ளையரை என்கவுன்ட்டர் செய்த போலீஸ்!
ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி!
முல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது? - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
சசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..!
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி