முடிந்தது ராஜஸ்தான் சாதனை: கொல்கத்தாவுக்கு 3-வது வெற்றி!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியுடன் நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.


Advertisement

பதினோறாவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், ஜெய்ப்பூரில் நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. 

டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக், முதலில் பீலிடிங்கை தேர்ந்தெடுத்தார். அதன்படி ராஜஸ்தான் கேப்டன் ரஹானேவும், டார்ஸி ஷார்ட்டும் களமிறங்கினர். ஸ்கோர் 54 ரன்களாக இருந்தபோது, 19 பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்த ரஹானே, தினேஷ் கார்த்திக்கால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். 


Advertisement

கடந்த போட்டியில் கலக்கிய சஞ்சு சாம்சன் 7 ரன்களில் திருப்திபட்டு சிவம் மாவி பந்துவீச்சில் அவுட்டானார். அடுத்து வந்த திரிபாதி 15, பென் ஸ்டோக்ஸ் 14, கவுதம் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, டார்ஸி ஷார்ட் பொறுமையாக ஆடி 44 ரன்களும் விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லர் 24 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி, 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியின் சுழல்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

பின்னர் கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரேனும் கிறிஸ் லின்னும் களமிறங்கினர். லின் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆக, நரேன் வழக்கம் போல பேட்டைச் சுழற்றினார். அவருடன் இணைந்த ராபின் உத்தப்பாவும் அதிரடி காட்டினார். 25 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தபோது சுனில் நரேன் தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார்.


Advertisement

உத்தப்பா, 36 பந்துகளில் 48 ரன்கள் எடுத்த நிலையில் கவுதம் பந்துவீச்சில் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் வந்த ராணாவும் கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் பொறுப்பாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். ராணா, 27 பந்துகளில் 35 ரன்னும் தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 42 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து 18.5 ஒவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்து கொல்கத்தா வெற்றி பெற்றது. நிதிஷ் ராணா ஆட்டநாயகன் விருது பெற்றார். 

இந்த வெற்றியின் மூலம் ஜெய்ப்பூரில் தொடர்ச்சியாக 9 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த, ராஜஸ்தான் அணியின் சாதனைக்கு கொல்கத்தா முற்றுப்புள்ளி வைத்தது. கொல்கத்தா அணி மூன்றாவது வெற்றியை பெற்றுள்ளது. 
 

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement