ஹோட்டல் அதிபரானார் பரோட்டா சூரி 

actor-soori-started-new-hotel-in-madurai

காமெடி நடிகர் பரோட்டா சூரி ஹோட்டல் அதிபராக அடுத்த கட்டத்திற்கு முன்னேறியிருக்கிறார்.


Advertisement

பரோட்டா காமெடி மூலம் ஓவர் நைட்டில் ஹிட் ஆனவர் காமெடி நடிகர் சூரி. அவர் இப்போது புதியதாக மதுரையில் ஒரு ஹோட்டலை திறந்திருக்கிறார். அவரது அப்பா மதுரை வட்டாரத்தில் பால் வியபாரியாக வலம் வந்தவர். அவரது மகன் நடிகராகி இப்போது ஹோட்டல் அதிபராக முன்னேறி இருக்கிறார். இந்த ஹோட்டல் மாடர்ன் வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடை பெற்றது. அவரது புதிய ஹோட்டலை நடிகர் சிவகார்த்திகேயன் திறந்து வைத்தார். திரைத்துறையில் இருக்கும் நட்சத்திரங்கள் பொதுவாக சைட் பிசினசாக வேறு ஏதாவது தொழிலில் கவனம் செலுத்துவது இயற்கை. அதன் அடிப்படையில் சூரி இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த ஹோட்டலை அவரது குடும்பத்தினர் நிர்வகிக்க உள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement