JUST IN

Advertisement

சைதாப்பேட்டை சங்கிலிப் பறிப்பு: சிசிடிவி காட்சிகளை மூலம் காவல்துறை விசாரணை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை சைதாப்பேட்டையில் பெண்ணிடம் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் பற்றிய சிசிடிவி காட்சிகள் காவல்துறைக்கு கிடைத்துள்ளன.


Advertisement

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த சசிகலா என்பவர், நேற்று முன்தினம் தனது வீட்டிலிருந்து தியாகராய நகரிலுள்ள கோயிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அண்ணா சாலையில் உள்ள பள்ளிவாசல் அருகே, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், சசிகலா அணிந்திருந்த சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினர்.

இதுகுறித்த புகாரின் பேரில், அந்தப் பகுதியில் இருக்கும் கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ள நகைப்பறிப்புக் காட்சிகளை சேகரித்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் பழைய குற்றவாளிகளுக்கு தொடர்பு உள்ளதா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். நகையை பறிகொடுத்த பெண், கொள்ளையர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் பதிவெண்ணைக் கொடுத்திருப்பதால் அதனைக் கொண்டும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement