அமெரிக்காவுக்கு பதிலடி: ஈரான் புதிய ஏவுகணை சோதனை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக, ஈரான் தெரிவித்துள்ளது.


Advertisement

ஈரான் நாட்டின் கோரம்ஷர் நகரில் இந்த சோதனை நடத்தப்பட்டது. ஏவுகணை சோதனை மேற்கொண்டதற்கான வீடியோ காட்சிகளை ஈரான் தேசிய ஊடகங்கள் நேற்று வெளியிட்டது. இருப்பினும் ஏவுகணை ஏவப்பட்ட தேதி தெரிவிக்கப்படவில்லை. இந்த ஏவுகணை 2000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தக்கக் கூடியது. 

இந்த ஏவுகணை பற்றிய அறிவிப்பு நேற்று நடைபெற்ற அந்நாட்டி ராணுவ அணிவகுப்பின் போது வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டது. ஈரான் நாட்டிற்கு எதிராக ஐ.நா. சபையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசியுள்ள நிலையில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஏவுகணை சோதனைக்கு பின்னர் பேசிய ஈரான் நாட்டின் தலைவர் அயத்துல்லா அலி காமெனி, டிரம்பின் மோசமான பேச்சு விரக்தியின் அறிகுறி என்று தெரிவித்தார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement