[X] Close >

தூக்கி வீசிய காட்டு யானை: ஈஷா மைய ஊழியர் பலி!

elephant--killed-the-employee

கோவையில் காட்டு யானை தாக்கியதில் ஈஷா யோகா மைய ஊழியர் உயிரிழந்தார்.


Advertisement

கோவை மாவட்டத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தின் ஐ.டி. பிரிவில், ஜெய்பூரைச் சேர்ந்த மணீஷ் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் முள்ளாங்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக காட்டு யானை ஒன்று வந்துள்ளது. அதனை பார்த்தவுடன் மணீஷ் அங்கிருந்து ஓட முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் மணீஷை தாக்கிய காட்டுப் யானை, அவரை தூக்கி வீசியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து தகவலறிந்து வந்த ஆலந்துறை போலீஸார், இறந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close