சூர்யா, தமன்னா, பிரபு, ஜெகன் நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம், ’அயன்’. கே.வி.ஆனந்த் இயக்கியிருந்த இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். ஏவி.எம் தயாரித்திருந்த இந்தப் படம், கடந்த 2009-ம் ஆண்டு வெளியானது.
இந்தப் படத்தின் அடுத்த பாகத்தை கே.வி.ஆனந்த் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாயின. இதுபற்றி கே.வி.ஆனந்த்திடம் கேட்டபோது, ’இரண்டாம் பாகம் உருவாக்குவதில் எனக்கு ஆர்வம் இல்லை. அதைவிட வேறு கதைகளை இயக்கிவிடலாம். அயன் படத்தின் அடுத்த பாகத்தை இயக்குகிறீர்களாமே என்றே எல்லோரும் கேட்கிறார்கள். அதில் உண்மையில்லை. நான் இப்போது வேறு கதையை உருவாக்கி இருக்கிறேன். அது பற்றிய விவரங்களை இப்போதே சொல்வது சரியாக இருக்காது. விரைவில் அடுத்த படம் பற்றி சொல்கிறேன்’ என்றார்.
கே.வி.ஆனந்த் அடுத்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் என்பதால் அது ’அயன் 2’வாக இருக்கலாம் எனக் கூறப்பட்டது.
Loading More post
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி