[X] Close

சென்னை: சொத்தை விற்ற முயன்ற தந்தையை அடித்துக் கொன்று நாடகமாடிய மகன் கைது

Subscribe
Chennai-A-son-has-been-arrested-for-beating-his-father-to-death-while-trying-to-sell-property

திருமணத்திற்கு முன்பு சொத்தை விற்க முயன்றதால் தந்தையை அடித்துக் கொன்ற மகனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.


Advertisement

சென்னை பள்ளிகரணை, அம்பாள் நகர், 2வது மெயின் ரோட்டில் வசித்து வருபவர் பிரேம்குமார் (எ) வி.பி.குமார் (74). இவரும் இவரது மகன் ஹரிஷ் (31) என்பவரும் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் அவர்கள் குடியிருக்கும் வீட்டை விற்கப் போவதாக மகனிடன் பிரேம்குமார் கூறியுள்ளார்.

ஹரிஷ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தனக்கு திருமணம் கூட ஆகவில்லை அதற்குள் வீட்டை விற்று விட்டால் எனக்கு யார் பெண் தருவார் என கூறி உச்சகட்ட கோபமடைந்த ஹரிஷ் ரீப்பர் கட்டையால் தந்தையின் தலையில் பலமாக அடித்துள்ளார்.


Advertisement

image

இதில் மயக்கமடைந்த தந்தையை தவறி விழுந்து விட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பிரேம்குமார் இறந்து விட்டார். பிரேத பரிசோதனையில் தலையில் அடித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததின் பேரில் மகன் ஹரிஷிடம் பள்ளிகரணை போலீசார் விசாரித்தனர்.

அப்போது ரீப்பர் கட்டையால் தந்தையை அடித்ததை ஹரிஷ் ஒப்புக் கொண்டார். அதனையடுத்து அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close