[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

கலிபோர்னியாவில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி, 12 பேர் படுகாயம்

at-least-3-reportedly-dead-12-injured-in-shooting-at-california-food-festival

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப் பட்டுள்ளனர். 12 பேர் படுகாயமடைந்தனர்.

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள கில்ராய் பகுதியில் உணவு திருவிழா நடந்து வருகிறது. இங்கு ஏராளமானோர் கூடியிருந்தனர். உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணியளவில் ராணுவ உடை அணிந்த ஒருவர், இங்கு துப்பாக்கியுடன் வந்தார். அவர் திடீரென மக்களை நோக்கி சரமாரியாக சுட ஆரம்பித்தார். இதையடுத்து அங்கு கூடியிருந்தவர்கள் அலறியபடி தப்பியோடினர். 

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 3 பேர் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்தனர். பலியானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. உடனடியாக அங்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. அதில் மக்கள் அலறி அடித்தபடியும் அழுதபடியும் ஓடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவரை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close