[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

மாணவரை கட்டிப்பிடித்த மாணவி ! நடவடிக்கை எடுத்த பல்கலைக்கழகம்

egypt-woman-expelled-from-university-for-hugging-male-friend

சக மாணவரை கட்டிப்பிடித்த காரணத்தினால் மாணவி பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் எகிப்தில் அரங்கேறியுள்ளது.

எகிப்தில் கடந்த மாதம் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அதில், இளைஞர் ஒருவர் கையில் பூங்கொத்துடன் பெண் ஒருவர் முன் மண்டியிட்டு அப்பெண்ணுக்கு தன் காதலை தெரிவிப்பது போன்று இருந்தது. அத்துடன் இருவரும் ஒருவருக்கொருவர் கட்டிபிடித்ததாகவும் வீடியோவில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சக மாணவரை கட்டிப்பிடித்த காரணத்தினால் அல் அசார் பல்கலைக்கழகம் மாணவியை பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கியுள்ளது. இருப்பினும் அந்த வீடியோ பல்கலைக்கழகத்தில் வைத்து எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. மாணவியின் செயலால் பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விட்டதாக கூறி பல்கலைக்கழகம் மாணவியை நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது. திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் கட்டிப்பிடித்து கொள்வது சமுதாயத்தின் கொள்கைகளுக்கு எதிரானது எனவும் தெரிவிக்கப்பட்டுளள்து. இதனிடையே பல்கலைக்கழகத்தின் முடிவை எதிர்த்து மாணவி முறையீடு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close