[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 4 தொகுதி இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டகம் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஆபாச வீடியோக்கள், சமூக சீர்கேடு வீடியோக்களை பதிவிறக்கம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையோடு டிக் டாக் செயலி மீதான தடை நீக்கம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
  • BREAKING-NEWS மு.க.அழகிரி மகன் தயாநிதிக்கு சொந்தமான ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கம்; மதுரை கீழவளவில் கிரானைட் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக தயாநிதி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS ஓபிஎஸ் - ஈபிஎஸ்க்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் சீராய்வு மனு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.71 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.17 காசுகளாகவும் விலை நிர்ணயம்

கூகுள் டூடுல் போட்டுக் கொண்டாடும் இந்த சார்லஸ் மைக்கேல் யார்? 

google-doodle-celebrates-306th-birth-anniversary-of-charles-michel-de-l-p-e-father-of-the-deaf

காதுகேளாதவர்கள் மற்றும் வாய்ப்பேசும் திறன் இல்லாதவர்களின் தந்தை எனப் பேற்றப்படும் சார்லசின் பிறந்தநாளை கூகுள் இன்று கொண்டாடி வருகிறது.

உலகம் முழுவதும் காது கேளாதவர்கள் மற்றும் வாய்ப் பேச முடியாதவர்கள் பயன்படுத்தும் மொழியாக ‘சைகை மொழி’  பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவர்கள் தங்களின் தேவைகளை இந்த சைகை வார்த்தைகளை கொண்டே பரிமாறிக் கொள்வர். இந்த மாற்றுத் திறனாளிகளுக்காகவே ஒரு மொழியைக் கண்டறிந்தவர் சார்லஸ்-மைக்கேல் டி லாபீ. இவரைதான் ‘சைகை மொழியின் தந்தை’என உலகம் போற்றுகிறது. இவருக்குதான் இன்று பிறந்தநாள். இவரது 306 வது பிறந்தநாளை கூகுள் இன்று டூடுல் போட்டு சிறப்பித்துள்ளது. 

இவர்தான் கேட்கும் திறன் இல்லாதவர்களுக்கும் வாய்ப் பேசும் திறன் இல்லாதவர்களுக்கும் என்று தனியாக ஒரு பள்ளிக் கூடத்தை நிறுவினார். அதாவது இன்று நேற்றல்ல; இவர் தனது பள்ளியை முதன்முதலாக நிறுவிய ஆண்டு 1760. ஆகவே இவரை ‘மனிதநேயமிக்க கல்வித்தந்தை’ என உலகம் சிறப்பித்து வருகிறது. 

பிரான்ஸ் நகரிலிருந்த உயர் குடும்பம் ஒன்றில் சார்லஸ்-மைக்கேல் 1712 ஆம் ஆண்டு பிறந்தார். அதாவது 18 ஆம் நூற்றாண்டில் பிறந்தார். அவர் பிறந்த நவம்பர் 24 ஆம் தேதியை மாற்றுத்தினறாளிகள் அனைவரும் தங்களின் பிறந்தநாளாகக் கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள். 

பாரிஸ் நகரம் ஒன்றிலுள்ள விளிம்புநிலை மக்கள் வசிக்கும் பகுதிக்கு ஒருமுறை இவர் சென்றிருந்தபோது அங்கிருந்த  கேட்கும் திறன் அற்ற மாற்றுத்திறனாளியான ஒரு பெண் பிள்ளையைக் கண்டார். அப்போது அவருக்குத் தோன்றியதுதான் இந்த ‘சைகை’ மொழி யோசனை. உடனே தனது எண்ணங்களை அந்தக் குழந்தையுடன் வார்த்தைகளற்ற மொழியில் பரிமாறிக்கொள்ளவும் செய்தார். 

உண்மையில் சார்லஸ்-மைக்கேல், கத்தோலிக்க மதபோதகருக்கானக் கல்வியையே கற்றுத்தேறியிருந்தார். ஏற்கெனவே அவருக்குள் ஒரு சேவை மனம் இருந்து வந்தது. அந்தச் சேவை உள்ளம்தான் அவரைக் கேட்கும் திறனற்ற மற்றும் பேசும் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான மொழியை உருக்க உந்தியது. உலகிலேயே முதன்முதலாக கேட்கும், வாய்ப் பேசும் திறன் குறைபாடுள்ள குழைந்தைகளுக்கு என்று இலவசமாக ஒரு பள்ளிக்கூடத்தை இவர் நிறுவினார். இவர் 1760 ஆண்டு நிறுவிய பள்ளிதான் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மகத்தானக் கல்வியை கற்றுத்தந்தது. 

இவருக்கு மதக் கல்வியை போதிப்பதில்தான் ஆர்வம் அதிகம் இருந்தது. ஆனால் அதனைக் கடந்து மாற்றுத்திறனாளிகளின் மொழியை உருவாக்குவதில் ஈடுப்பட்டார் சார்லஸ். இவரது மொழியறிவின் மூலம்தான் மாற்றுத்திறனாளிகள் தங்களின் நியாயத்தை நீதிமன்றங்களில் முன் வைக்க முடிந்தது. அதற்கு முன் உலகம் இந்தச் சாதனையை எட்டிப்பிடிக்கவில்லை.

இந்த மகத்தான மனிதர் 1789 டிசம்பர் 23 அன்று இந்த உலகை விட்டுப் பிரிந்தார். இவர் மறைந்து இரண்டு ஆண்டுகள் கழித்த பிறகே இவரது சாதனையை அந்நாட்டு அரசு அங்கிகரித்தது. மேலும் ‘மனிதகுலத்தின் பயனாளி’ என மதித்து போற்றியது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close