[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு

சர்ச்சையால் முடிவை மாற்றிக் கொண்ட ட்ரம்ப் 

u-s-senators-pay-tribute-to-john-mccain-as-white-house-wobbles-on-flag

எம்.பி.க்களின் கடும் கண்டனத்துக்குப் பின் ஜான் மெக்கெயின் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் வெள்ளை மாளிகையில் தேசியக் கொடி மீண்டும் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

மூளை புற்றுநோய் காரணமாக கடந்த சனிக்கிழமை உயிரிழந்த ஜான் மெக்கெயின் மறைவுக்கு அதிபர் ட்ரம்‌ப், முன்னாள் அதிபர் ஒபாமா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். துக்கம் அனுசரிக்கும் வகையில் கடந்த சனிக்கிழமை அமெரிக்காவின் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. ஜான் மெக்கெயினும், அதிபர் ட்ரம்பும் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் என்றாலும், இருவருக்கும் இடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. 

இந்நிலையில் அவரது மறைவுக்கு ஒருநாள் மட்டுமே துக்கம் அனுசரிக்கும் வகையில் வெள்ளை மாளிகையில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. மறுநாள் மீண்டும் முழுக் கம்பத்தில் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டதால், ஆவேசம் அடைந்த சக எம்.பி.க்கள், அதிபர் ட்ரம்புக்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதைத்தொடர்ந்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மீண்டும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட ட்ரம‌ப் உத்தரவிட்டார். 

அமெரிக்க சட்டப்படி உயிரிழக்கும் முக்கிய பிரமுகரின் இறுதிச் சடங்கு முடியும் வரையில், தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுவது மரபாக பின்பற்றப்பட்டு வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close