[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆதார் அடையாள அட்டை செல்லும் - உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் செப்டம்பர் 28 முதல் 30ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு

"வடகொரியா மீதான தடைகளை தொடர வேண்டும்"- ஜப்பான்

donald-trump-cancels-meeting-with-north-korean-leader-kim-jong-un

கிம் ஜாங் உன் உடனான சந்திப்பு ரத்து செய்யப்பட்டதை அடுத்து வட கொரியா மீதான தடைகளை, அமெரிக்கா தொடர வேண்டும் என ஜப்பான் வலியுறுத்தியுள்ளது. 

சிங்கப்பூரில் கிம் ஜாங் உன்-னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக ட்விட்டரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இதற்கிடையே ட்ரம்புடனான சந்திப்பை ரத்துச் செய்யப் போவதாக கிம் ஜாங் உன் கடந்த வாரம் தெரிவித்து வந்ததாக தகவல் வெளியாகின. இந்த நிலையில் சீன அதிபர் ஸீ ஜின் பிங்கை சந்தித்த பிறகே, கிம் ஜாங் உன் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாக குற்றம்சாட்டி வந்தது அமெரிக்கா. இதனால் இந்தச் சந்திப்பு‌ நடக்குமா என்ற சந்தேகம் தொடர்ந்து நீடித்து வந்த நிலையில் இச்சந்திப்பு நேற்று ரத்து செய்யப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது.

இந்நிலையில் டோக்கியோவில் செய்தியாளர்களை சந்தித்த ஜப்பான் தலைமைச் செயலாளர் யோஷிஹிடே சுகா, வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்களை‌‌ முடக்குவதற்கு இந்தச் சந்திப்பு அவசியம் என்றாலும், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முடிவை வரவேற்கிறோம் என தெரிவித்தார். அதே சமயம் வட‌கொரியா மீதான ஐ.நா.வின் தடைகளை தொடர வேண்டும் என தெரிவித்தார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close