[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் அமலுக்கு வந்தது புதிய சொத்து வரி!
  • BREAKING-NEWS காஞ்சிபுரத்தில் கனமழையால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்- விவசாயிகள் வேதனை

சிக்கினான் ஆஸ்கர் திருடன்: காட்டிக்கொடுத்தது பேஸ்புக் லைவ்!

the-man-who-stole-frances-mcdormand-s-oscar-streamed-it-to-facebook

ஆஸ்கர் விருது வழங்கும் விழா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், ’தி ஷேப் ஆப் வாட்டர்’ படத்துக்கு நான்கு விருதுகள் கிடைத்தன. சிறந்த நடிகருக்கான விருது ’டார்க்கஸ்ட் ஹவர்’ படத்தில் நடித்த கேரி ஓல்டுமேனுக்கும் சிறந்த நடிகை ’திரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி’ படத்தில் நடித்த பிரான்சஸ் மிக்டார்மண்ட்டுக்கும் வழங்கப்பட்டது.

விருது விழா முடிந்ததும் இரவு பார்ட்டி நடந்தது. இதில் ஹாலிவுட் பிரபலங்கள், விருது பெற்றவர்கள் மற்றும் விஐபிகள் கலந்துகொண்டனர். பார்ட்டி முடிந்து பார்த்தால், பிரான்சஸின் விருதை காணவில்லை. அவர் அங்கும் இங்கும் தேடினார். எங்கும் கிடைக்கவில்லை. கதறி அழத்தொடங்கிவிட்டார் பிரான்சஸ். அங்கிருந்தவர்களுக்கும் அதிர்ச்சி. இதுபற்றி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் விசாரித்து, டெர்ரி பிரையண்ட் (47) என்பவரை கைது செய்தனர்.

(டெர்ரி பிரையண்ட்)

பார்ட்டிக்கு டெர்ரிக்கும் அழைப்பு வந்திருந்தது. அங்கு வந்த அவர், போதையில் பிரான்சஸின் டிராபியை கையில் வைத்துக்கொண்டு பேஸ்புக்கில் லைவ் செய்தார். ’இது எனக்கு இசைக்காகக் கிடைத்திருக்கிற விருது’ என்று கூறிக்கொண்டே அங்கிருந்த ஹாலிவுட் பிரபலங்களுடன் அவர் நடமாடிக் கொண்டிருந்தார். ’இது எனக்கு கிடைத்த விருது’ என திரும்ப திரும்பக் கூறிக்கொண்டிருந்தார். சந்தேகமடைந்த போலீசார், அவரை கைது செய்து விசாரித்தனர். திருடியதை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, பிரான்சஸும் அவரது ஆஸ்கரும் மகிழ்ச்சியாக இணைந்ததாக அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. டெர்ரி பிரையண்ட் சமையல் பற்றி எழுதும் எழுத்தாளர் எனக் கூறப்படுகிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close