[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி நாளை சந்திக்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆலோசனை
  • BREAKING-NEWS கேதார்நாத்தில் வழிபட்டதை நான் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்; எனக்கும் கேதார்நாத்துக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS சூலூர்: கருமத்தம்பட்டியில் வேறு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டுவரப்பட்டு தாமதமாக வாக்குப்பதிவு தொடக்கம்; வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறினால் வாக்குப்பதிவு தொடங்காமல் இருந்தது
  • BREAKING-NEWS 7ம் கட்ட மக்களவை தேர்தல் - பீகார் முதல்வர் நிதீஷ் குமார் பாட்னாவில் வாக்களித்தார்
  • BREAKING-NEWS இறுதிக்கட்ட மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் வாக்களித்தார்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடைபெறுகிறது

'டியர் ஒபாமா'- வைரலாகும் 6வயது அமெரிக்க சிறுவனின் கடிதம்

want-to-be-his-brother-6-year-old-american-wishes-to-adopt-syrian-boy

சிரியாவில் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி நடந்த வான்வழி தாக்குதலில் 3 பேர் பலியாகினர். 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஓம்ரான் தக்னீஷ் குழந்தைத்தனத்தோடு நடந்ததை அறியாமல் தனது தலையில் இருந்து வழியும் ரத்தத்தை துடைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.

இந்நிலையில் அந்த சிறுவனுக்கு தான் ஒரு குடும்பத்தை அளிக்க விரும்புவதாக 6 வயது அமெரிக்க சிறுவன், அதிபர் ஒபாமாவிற்கு கடிதம் எழுதியுள்ளான். மிகவும் உருக்கமான அந்த கடிதத்தில் சிறுவன் அலெக்ஸ் கூறியிருப்பதாவது: ‘டியர் பிரசிடென்ட் ஒபாமா சிரியாவில் காயங்களுடன் ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட சிறுவனை நான் உங்களுக்கு நினைவுப்படுத்துகிறேன். அவன் எங்கே இருக்கிறான் தற்போது?, அவனை அழைத்து வாருங்கள். எனது தங்கை கேத்ரினாவும், நானும், தம்பிக்காக (ஓம்ரான்) வண்ணத்துப்பூச்சிகள், பலூன்கள் மற்றும் பட்டாசுகளை சேகரித்து வைத்துள்ளோம். ஒம்ரானுக்கு எனது நண்பர்களை அறிமுகப்படுத்துவேன். நாங்கள் அனைவரும் அவனுடன் விளையாடுவோம். எங்களது பிறந்த நாள் கொண்ட்டாட்டத்தில் பங்கேற்க அவனை அழைப்போம். அவனுக்கு மற்றொரு மொழியாக ஆங்கிலத்தை கற்றுக்கொடுப்போம். அவனுக்காக ஒரு குடும்பத்தை அளிக்க விரும்புகிறேன்’ என்று அந்த கடிதத்தில் சிறுவன் கூறியுள்ளான்.

இந்நிலையில் ஒவ்வொரு நாளும் 10 கடிதங்களை படிப்பதை வழக்கமாக வைத்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பார்வைக்கு இக்கடிதத்தை அதிகாரிகள் வைத்துள்ளனர். அதனை படித்த ஒபாமா மிகவும் மனம் உருகினார். அகதிகள் குறித்து அலெக்ஸின் மூலமாக அனைத்தையும் கற்றுக்கொண்டோம் என்று கூறியுள்ளார்.

தன்னுடைய இதயத்தைத் தொட்ட அக்கடிதத்தை ஒபாமா சமீபத்தில் ஐ.நா. சபையின் உச்சி மாநாட்டில் வாசித்துக் காட்டினார். இதுதவிர அலெக்ஸ் கடிதம் வாசிப்பது போன்ற வீடியோவை தன்னுடைய பேஸ்புக் பக்கத்திலும் ஒபாமா பதிவிட்டுள்ளார். இதுவரை 80 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர். 1,50,000 பேர் இந்த வீடியோவை தங்களது பேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close