[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
  • BREAKING-NEWS ஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கேரளா முயற்சி: தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு

kerala-try-to-build-new-dam-in-bhavani-river-tn-farmers-opposed

பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்ட மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கேரள அரசு அனுமதி கேட்டிற்பதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

முக்காலி என்ற இடத்தில் பவானி ஆற்றின் குறுக்கே 50 அடி உயரத்திற்கு 900 கோடி ரூபாய் மதிப்பில் கேரள அரசு அணை கட்டும் ‌நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அணைகட்டுவதற்கான திட்ட வரைபடத்தை கேரள அரசு தயாரித்துள்ளது. அதற்கு அனுமதி கேட்டு மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு கேரள அரசு கடிதம் எழுதியுள்ளது.

பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்ட அனுமதி வழங்கக்கூடாது என மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்த வேண்‌டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அணைக்கட்டப்பட்டால் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் என்றும் பல லட்சம் ஏக்கர் விளைநிலங்களின் பாசன வசதியும் தடைபடும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் அதன்க‌ரணமாக பில்லூர், பவானி சாகர் மற்றும் மேட்டூர் அணைகளுக்கு தண்ணீர் வராது என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதனால் தமிழகத்தின் பெரும்பகுதி வறட்சி ‌‌நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close