[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை
  • BREAKING-NEWS குடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது

குடும்பத் தகராறில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை வெட்டிய மகன்

lawyer-attacked-by-his-son-in-hc-premises

சென்னை உயர்நீதிமன்றத்தில், பட்டப் பகலில் வழக்கறிஞர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டார்.

உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கான கட்டடத்தில் உள்ள அறையில், நண்பரை சந்திப்பதற்காக பழைய வண்ணார்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் மணிமாறன் வந்திருந்தார். அப்போது அங்கு கத்தியுடன் வந்த ராஜேஷ் என்பவர், வழக்கறிஞரை சரமாரியாக வெட்டினார்.

இதையடுத்து, அங்கிருந்த சக வழக்கறிஞர்கள், கத்தியால் தாக்கிய நபரை பிடித்து அடித்து உதைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். கத்தியால் வெட்டப்பட்ட வழக்கறிஞர், ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வழக்கறிஞர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த ராஜேஷ், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குடும்பப் பிரச்சனை காரணமாக மகனே, தந்தையை வெட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயர்பாதுகாப்பு மண்டலமாக இருக்கும் உயர்நீதிமன்றத்தில், உயர்நீதிமன்ற கட்டடம் உள்பட 35 சதவிகித பகுதி மத்திய பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மீதமுள்ள குடும்பநல நீதிமன்றம், வழக்கறிஞர்கள் கட்டடம் உள்ளிட்ட பகுதிகள் தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதால் அவற்றின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. தீவிர சோதனைக்குப் பின்னரே நீதிமன்ற வளாகத்திற்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிற நிலையில், கத்தியுடன் ஒருவர் நுழைந்தது எப்படி என்று வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close