கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 2 வாரங்களுக்கு முன்பு கடலுக்குச் சென்ற மீனவர்களில், 60 பேர் இதுவரை கரை திரும்பாத நிலையில் அவர்களின் நிலை குறித்து தெரியாததால் உறவினர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம், வள்ளவிளை, இரவிபுத்தன்துறை ஆகிய மீனவ கிராமங்களிலிருந்து கடந்த 2 வாரங்களுக்கு முன் 8 படகுகளில் 90 மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்றனர். புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், 3 படகுகள் கேரளாவின் கொச்சி மற்றும் கோவாவின் ஹார்வா துறைமுகங்களில் கரை ஒதுங்கின. அதில் இருந்த 30 மீனவர்கள் பத்திரமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில், மீதமுள்ள 5 படகுகளில் சென்ற 60 பேரின் நிலை குறித்த தகவல் இதுவரை கிடைக்கவில்லை. இதனால் அவர்களது உறவினர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இதனிடையே புயல் எச்சரிக்கைக்கு முன்னதாக வள்ளவிளையிலிருந்து கடலுக்குச் சென்ற 5 படகுகள் மாலத்தீவு அருகே பத்திரமாக கரை சேர்ந்துள்ளன. கலபானி தீவில் மீனவர்கள் தங்கியிருந்த நிலையில், சூறைக்காற்றில் ஒரு படகு தரைக்கு தூக்கி வீசப்பட்டு கடுமையாக சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அசத்திய ரிஷப், ஸ்ரேயாஸ் ஜோடி - இந்திய அணி 287 ரன் குவிப்பு
“எதிரிக்கும் உதவி செய்” - ‘அன்புதான் தமிழ்’ என்ற அமைப்பை தொடங்கினார் லாரன்ஸ்
பழைய 500 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த மூதாட்டிகளுள் ஒருவர் புற்றுநோயால் உயிரிழப்பு
“தேர்தலில் நிற்க சாதிதான் தகுதியா?” - பொதுத் தொகுதிகளில் பட்டியலின மக்கள் போட்டியிடுவது சாத்தியமா?
4 மாத கர்ப்பிணிப் பெண் தற்கொலை - “மாப்பிள்ளை வீட்டார் கொன்றுவிட்டார்கள்” என புகார்