[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கையில் 8வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் 81.52% வாக்குகள் பதிவாகியுள்ளன
  • BREAKING-NEWS ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா செய்தார்
  • BREAKING-NEWS கேரளா: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு: 4 மணி நேரத்தில் 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானதாக தகவல்
  • BREAKING-NEWS கோவாவில் மிக் ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது: விமானிகள் இருவரும் பாதுகாப்பாக தப்பினர்
  • BREAKING-NEWS கனமழை காரணமாக நெல்லை நடுவக்குறிச்சி குளக்கரையில் பல இடங்களில் உடைப்பு

ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய பேரறிவாளன் மனு விசாரணைக்கு ஏற்பு 

perarivalan-petition-accept-by-supreme-court

பேரறிவாளன் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை நவம்பர் 5-ம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991 ஆண்டு மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். இந்த வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி உள்ளிடோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இவர்களுக்கு முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 

மேலும் இந்த வழக்கில் பேட்டரி வாங்கிக்கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.  

அந்த மனுவில் பெல்ட் வெடிகுண்டில் வைக்கப்பட்ட பேட்டரி தான் வாங்கி கொடுத்தது என்ற குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

மேலும், வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது தொடர்பான சி.பி.ஐ. சிறப்புக்குழு விசாரணை அறிக்கையை மனுதாரர் பேரறிவாளன் தரப்பிற்கு கொடுக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதோடு, இதுதொடர்பாக கூடுதல் பதில் அளிக்க சி.பி.ஐ மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
 
இந்த வழக்கானது கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக விசாரணைக்கு வரவில்லை. குறிப்பாக விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட பின்னர் மீண்டும் விசாரணை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு வரும் நவம்பர் 5-ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. 

எனவே அந்த வழக்கை பட்டியலில் இருந்து நீக்கக்கூடாது, விசாரிக்க வேண்டும் என பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு, நீதிபதி ரமணா அமர்வில் முறையிட்டார். அதனை ஏற்ற நீதிபதி என்.வி.ரமணா, வழக்கு பட்டியலில் இருந்து நீக்கப்படாது எனவும், நவம்பர் 5-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close