[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

கொள்ளையர்களை அலறவிட்ட வயதான தம்பதி - வீடு தேடி வந்து பாராட்டிய காவல் கண்காணிப்பாளர்

commissioner-wishes-to-old-age-couple-in-tirunelveli

நெல்லையில் கொள்ளையர்களை தீரத்துடன் விரட்டிய தம்பதியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தில் முகமூடி அணிந்து வந்த இரண்டு பேர், வீட்டின் வாசலில் அமர்ந்திருந்த முதியவர் சண்முகவேல் என்பவரை அரிவாளால் தாக்கிவிட்டு கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது, அவரும் அவரது மனைவி செந்தாமரையும் இணைந்து கொள்ளையர்களை துணிச்சலுடன் தாக்கினர். இதில் நிலைகுலைந்து போன கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். 

இச்சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கொள்ளை சம்பவம் நடந்த இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். சண்முகவேல் மற்றும் செந்தாமரை ஆகிய இருவரிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் அவ்விருவரின் வீரதீரச் செயலுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டும் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close