[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

விபத்தில் சிக்கியவரை விரைவாக மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிய ஆட்சியர்..!

dharmapuri-collector-helped-in-correct-time

தருமபுரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியவரை மாவட்ட ஆட்சியர் மீட்டு, சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்தில் நடைபெற்று வரும் அரசு திட்டப் பணிகளை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் மலர்விழி சென்றுள்ளார். தொடர்ந்து ஆய்வு முடித்த பின்னர் அவர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் தருமபுரி திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, காரிமங்கலம் அடுத்த மாரவாடி கூட்டு ரோடு பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார். மேலும் அவருடன் பயணித்தவர் பலத்த காயமடைந்து சாலையில் விழுந்து கிடந்துள்ளார். இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர், விபத்தில் சிக்கியவரை, மீட்டு முதலுதவி கொடுத்துள்ளார். தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

ஆனால், ஆம்புலன்ஸ் வர தாமதமாகலாம் என்ற சூழல் நிலவியது. இதை அறிந்த மாவட்ட ஆட்சியர், விபத்தில் சிக்கியவரின் ரத்த இழப்பை தடுக்கும் வகையில் காயமடைந்த இடங்களில் அரசு பணியாளர்கள் மூலம் கட்டுப் போடச் செய்தார். பின்னர், ஆய்வுப் பணியின் போது ஆட்சியருடன் சென்றிருந்த மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலரின் வாகனத்தில் அவரை ஏற்றி தருமபுரி அரசு மருத்துவமனைக்கு விரைவாக அனுப்பி வைத்தார். இதனைத் தொடர்ந்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தொடர்புகொண்டு விபத்தில் சிக்கியவருக்கு உயர்ந்த சிகிச்சை வழங்க மருத்துவ கல்லூரி முதல்வருக்கு மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவிட்டார்.

இந்த விபத்து குறித்து மதிகோன்பாளையம் போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில்  விபத்தில் உயிரிழந்தவர் மாட்லாம்பட்டி அடுத்த கெங்குசெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காசி(50) எனவும், பலத்த காயமடைந்து சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர் காரிமங்கலம் அடுத்த பள்ளத்துகொல்லை கிராமத்தைச் சேர்ந்த மாது(55) என்பதும் தெரிய வந்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close