[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

வீரிட்டு எழுந்த நாகப் பாம்பு - வைரலான ‘ஸ்நேக் மேன்’ வீடியோ

man-caught-snake-viral-video

பைக்கில் இருந்து வெளியே வந்து படமெடுத்து ஆடும் நல்ல பாம்பை, ஒருவர் லாவகமாக பிடிக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் இங்கு படமெடுத்து ஆடும் நல்ல பாம்பையே ஒருவர் இயல்பாக கையாள்கிறார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. பெங்களூரு பதிவெண் கொண்ட டிவிஎஸ் விக்டர் ஒன்றின் பின்பக்க இருக்கையில் நல்ல பாம்பு ஒன்று இருக்கிறது. அதனை சின்ன கம்பு மூலம் குத்தி ஒருவர் வெளியே எடுக்க பார்க்கிறார். 

அப்போது இருக்கைக்கு அடியில் இருந்து நல்ல பாம்பு, வீரிட்டு எழுந்து படமெடுத்து ஆடுகிறது. தொடர்ந்து அந்த நபர், கைகளில் எந்தவித ஆயுதமும் இன்றி பாம்பை லாவகமாக பிடிக்கிறார். இதனை சுற்றியிருப்பவர்கள் பலரும் வேடிக்கை பார்க்கின்றனர். 

தன் திறமையில் இளைஞர் பாம்பை லாவகமாக பிடிக்கும் அந்த வீடியோ காட்சிகளை பலரும், வேகமாக ஷேர் செய்து வருவதால் அந்த வீடியோ வைரலாகி உள்ளது.
 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close