[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு

 “கூடுதல் கல்வித்தகுதிக்காக வேலைவாய்ப்பில் உரிமைக்கோர முடியாது” - உயர்நீதிமன்றம்

high-court-said-you-cannot-claim-employment-for-further-education

நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் கல்வித்தகுதி உள்ளதாக கூறி வேலைவாய்ப்பில் உரிமைகோர முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை மெட்ரோ நிலையத்தில் ஓட்டுநர் மற்றும் நிலைய கட்டுப்பாட்டு அதிகாரி பதவிக்கு தேர்வு நடைபெற்றது. இதற்கான அறிவிப்பாணை விண்ணப்பத்தில் கல்வித்தகுதி டிப்ளோமோ படித்திருக்க வேண்டும் எனவும் கூடுதல் கல்வித்தகுதி இருந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் கூடுதல் கல்வித்தகுதி உடையவர்கள் பணியில் அமர்த்தப்பட்டால் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் அறிவிப்பானையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி லட்சுமி பிரபா என்பவர் கூடுதல் கல்வித்தகுதி காரணமாக கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மெட்ரோ பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். 

இந்நிலையில் லட்சுமி பிரபா உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், தான் டிப்ளோமோ படித்துவிட்டு மேற்கொண்டு பி.இ படித்து வந்தேன். ஆனால் பி.இ தேர்வு முடிவு வெளியாகவில்லை. இதனிடையே மெட்ரோ வேலைக்கு தேர்வெழுதி வெற்றி பெற்றேன். ஆனால் கூடுதல் கல்வித்தகுதியை காரணம் காட்டி மெட்ரோ நிர்வாகம் எனக்கு பணி தர மறுத்துள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வேலைக்கு விண்ணப்பிக்கும் சமயத்தில் தன்னிடம் பி.இ சான்றிதழ் இல்லை எனவும் பின்புதான் நான் சான்றிதழ் பெற்றேன் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் கூடுதல் கல்வித்தகுதியை காரணம் காட்டி மெட்ரோ நிர்வாகம் செய்வது எனது வேலைவாய்ப்பை தட்டிப்பறிக்கும் செயல் என தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து வாதாடிய மெட்ரோ நிர்வாகம் தரப்பு பி.இ தேர்வில் வெற்றி பெற்றது தெரிந்தும் அதை மறைத்து இந்த வேலைக்கு மனுதாரர் விண்ணப்பித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது. மெட்ரோ நிர்வாகத்தின் வாதத்தை ஏற்று நீதிபதி வைத்தியநாதன், வேலையில்லா திண்டாட்டம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை எனவும் ஆனால், நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் கல்வித்தகுதி உள்ளதாக கூறி வேலைவாய்ப்பில் உரிமைகோர முடியாது எனவும் கூறி மனுவை தள்ளுபடி செய்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close