[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது
  • BREAKING-NEWS முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்
  • BREAKING-NEWS மதுரை மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் வேட்பு மனு தாக்கல் செய்தார்

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை - பெற்றோரை மிரட்டிய 4 பேர் கைது

salem-child-abuse-murder-case-4-persons-arrested-by-police

சேலத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், ‌அவரது பெற்றோருக்கு மிரட்டல் விடுத்ததாக 4 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த, சென்றாயன்பாளையம் கிராமத்தை சேர்ந்த பரமசிவம்-பழனியம்மாள் தம்பதியரின் மகள் பூங்கொடி. இச்சிறுமி அதே கிராமத்திலுள்ள அரசு துவக்கப்பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த பிப்ரவரி 14ம் தேதி இரவு, பெற்றோருடன் வீட்டில் தூங்கிய சிறுமியை கடத்திச் சென்ற கும்பல், கிராமத்தை ஒட்டியுள்ள மலைக்குன்றில் பாலியல் வன்கொடுமை செய்து, கொடூரமாக கொலை செய்தது. பின்னர் பெருமாள் கோயில் அருகிலுள்ள மரத்தில் சிறுமி பூங்கொடி சடலத்தை நிர்வாண நிலையில் தூக்கில் தொங்க விட்டு அந்தக் கும்பல் தப்பிச் சென்றது. 

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக, அவரது வீட்டுக்கு அருகே பெட்டிக்கடை வைத்திருக்கும் பா.ம.க. பிரமுகரான பூபதி (31), அவரது நண்பர்களாக கிரானைட் தொழிலாளி பிரபாகரன் (26), ஆனந்தன் (22), லாரி டிரைவர் ஆனந்தபாபு (29), பாலகிருஷ்ணன் (28) ஆகிய ஐந்து பேரை வாழப்பாடி போலீஸார் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தற்போது அனைவரும் ஜாமீனில் உள்ளனர். மகளை பறிகொடுத்த தறித்தொழிலாளி பரமசிவம் குடும்பம், அந்தக் கிராமத்தை விட்டு வெளியேறி, தற்போது பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த தும்பல் கிராமத்தில் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில், சிறுமியின் தந்தை பரமசிவத்துக்கு மொபைல்ஃபோனில் தொடர்பு கொண்டு, வழக்கில் சாட்சி சொல்லக்கூடாது, மீறி சாட்சி சொன்னால், உங்களையும் கொலை செய்து விடுவோம் என மர்ம நபர்கள் மிரட்டியதாக தெரிகிறது. இதுதொடர்பாக கோவை மண்டல ஐ.ஜி., டேவிட்சன் தேவ ஆசிர்வாதம், சேலம் டி.ஐ.ஜி. அமுல்ராஜ், சேலம் போலீஸ் எஸ்.பி., சக்திவேல் ஆகியோரிடம், பரமசிவம் புகார் செய்தார். 

இந்நிலையில் வாழப்பாடி காவல்துறையினர் விசாரணை நடத்தி, சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய பூபதி, ஆனந்தன், ஆனந்தபாபு, பிரபாகரன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close