[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

மதுரையைக் கலக்கும் மணம் மாறாத மண்குவளை பால்

mud-pot-is-the-alternate-for-plastic-in-madurai

மதுரையில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தடுக்கும் விதமாக மண் குவளையில் நறுமண பாலை வட மாநில இளைஞர் ஒருவர் விற்பனை செய்கிறார். 

மதுரை மேலமாசி வீதி பகுதியில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக நறுமணபால் விற்பனை செய்து வருபவர் சுரேஷ்குமார். இவரது பூர்விகம் ராஜஸ்தான் மாநிலம் என்றாலும் கடந்த இரண்டு தலைமுறைகளாக மதுரையில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார். காலை 10 முதல் மாலை 5 மணி வரை லெஸ்ஸி விற்பனையும், மாலை 6.00 மணி முதல் இரவு 10. 00 மணி வரை பாதாம் பால் என விற்பனை செய்து வருகின்றார். மேலும் இந்த நறுமண பாலான பாதாம் பாலை, கண்களை மூடிக் கொண்டு இவர் இயல்பாக பித்தளை சொம்பில் ஆற்றுவதை பார்ப்பதற்காகவே இவரது கடைக்கு வாடிக்கையாளர்கள் அதிகம் வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு அரசு தடை விதித்துள்ளதைத் தொடர்ந்து இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இவர் மண் குவளைகளில் நறுமண பால் விற்பனை செய்து வருகின்றார். இதற்காக வெளி மாநிலம், மற்றும் வெளி ஊர்களில் இருந்து மண் குவளைகளை 5 முதல் 6 ரூபாய் வரை விலைக் கொடுத்து வாங்கி வரும் இவர், இதன் மூலம் மண்பாண்ட தொழிலார்களின் வாழ்வும் முன்னேற்றமடையும் எனத் தெரிவிக்கின்றார். 

இது குறித்து சுரேஷ்குமார் கூறும்போது, இந்த மண் குவளைகளை பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதற்காக வெளிமாநிலம், இதர மாவட்டங்களில் இருந்து அதிக விலை கொடுத்து வாங்கி வருகின்றோம். மேலும் லாரி கட்டணங்களும் அதிகம், அதனால் இந்த மண் குவளைகளை இங்குள்ளவர்கள் உற்பத்தி செய்தால் விலை குறைவாகவும், மக்களின் பயன்பாடும் அதிகமாகம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close