[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்

காற்றழுத்தம் புயலாக மாற வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்

atmosphere-is-likely-to-become-storm-tamilnadu-regional-meteorological-department

அந்தமானில் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மை‌யம் தெரிவித்துள்ளது. 

வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு மற்றும் கேரளா, தெற்கு உள் கர்நாடகா, ஆந்திராவின் ராயலசீமா பகுதிகளிலும் தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் தெரிவித்தது. தீபாவளிக்கு முன்பாக கூட சில இடங்களில் மழை பெய்தது. ஆனால், பெரிய அளவில் மழை இதுவரை பெய்யவில்லை. தீபாவளி மற்றும் அதற்கடுத்த நாளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. ஆனால், தமிழகத்தில் ஒரிரு மாவட்டங்களில் மட்டும் மழை பெய்தது.

     

இந்நிலையில், அந்தமானில் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மை‌யம் தெரிவித்துள்ளது. அதேபோல குமரிக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் தென் வங்கக் கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

     

சென்னையை பொருத்தவரை மழைக்கான வாய்ப்பு குறைவு என்றும் புயல் நெருங்கும்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கலாம் என வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் சீர்காழியில் ஏழு சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close