[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

பெட்ரோல் பங்கில் கத்தியால் குத்திக் கொள்ளை

covai-petrol-punk-robber-cctv-footage

கோவையில் பெட்ரோல் பங்குகளில் மூன்றுபேரை கத்தியால் குத்தி பணம் பறிக்கும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. 

கோவை சூலூர் அருகே உள்ள முதலிபாளையம் பிரிவிலுள்ள ராஜலிங்கம் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கு உள்ளது. அங்கு நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் பங்கில் பணியில் இருந்த ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். அவர் சத்தம் போட்டதால் பங்கில் தூங்கிக்கொண்டு இருந்த மற்ற ஊழியர்கள் எழுந்து ஓடி வந்தனர். 

இதனால் ஆத்திரமடைந்த அடையாளம் தெரியாத நபர்கள் தேவராஜனை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதைத்தொடர்ந்து கருமத்தம்பட்டியில் உள்ள சரவணகுமார் என்பவருக்கு சொந்தமான மற்றொரு பங்கிற்கு அந்த நபர்கள் சென்றனர். அங்கு பணியில் இருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பங்கஜ்குமார் மற்றும் தீரன் குமார் ஆகிய இருவரையும் கத்தியால் குத்தி பணப்பையை பறித்து சென்றனர்.

காயமடைந்த தேவராஜ், பங்கஜ்குமார் மற்றும் தீரன் குமார் ஆகிய மூவரையும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இதன்மூலம் கொண்டு சூலூர் மற்றும் கருமத்தாம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close