[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கஜா புயல் பாதிப்புக்கு பிரதமரை சந்தித்து நிவாரண நிதி கோர டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS ஓசூர் அருகே தம்பதி ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சூடுகொண்டப்பள்ளியில் நந்தீஷ் பெற்றோரிடம் எஸ்.சி., எஸ்.டி ஆணைய துணைத்தலைவர் முருகன் விசாரணை
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

யுடியூப் வீடியோக்களிலும் வருகிறது ட்ரெண்டிங் # ஹேஷ்டேக்ஸ்

youtube-have-update-hashtag-hyperlink

ட்விட்டரைப் போன்று யுடியூபிலும் (YouTube) # ஹேஷ்டேக்ஸ் முறை அறிமுகமாகிறது.

தற்போது உள்ள சமூக வலைத்தளங்களில் ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை. இதில் வாட்ஸ்அப் என்பது தொலைபேசி நண்பர்களுடன் கலந்துரையாடும் தளமாக உள்ளது. ஆனால் ஃபேஸ்புக், ட்விட்டர் என்பது பிரபலங்கள், நண்பர்கள் என அனைவரும் சங்கமிக்கும் இடமாக இருக்கிறது. இந்த இரண்டு தளங்களிலும் நாம் ஒரு பதிவை வெளியிடும் போது, அதனை எளிதில் நெட்டிசன்கள் பார்க்கும் வகையில் # என்ற குறியீட்டுடன் பதிவிடுகிறோம்.

இந்த # என்பது ஃபேஸ்புக்கை விட, ட்விட்டரில் பிரபலம் வாய்ந்ததாக உள்ளது. ஏனெனில் ட்விட்டரில் அதிக முறை பயன்படுத்தப்படும் ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் இடம்பிடிக்கும். இதனால் ஏதேனும் ஒரு செய்தி அன்றைய தினத்தில் வைரலானால், அதை # மூலம் நெட்டிசன்கள் பரப்பி ட்ரெண்டிங்காக செய்வனர். இதேபோன்று யுடியூப்பிலும் நாம் # பயன்படுத்தி வீடியோ பதிவை வெளியிட முடியும். ஆனால் இது அனைத்து தரப்பு வீடியோக்களை காண்பிக்கும்.

இந்நிலையில் யுடியூப் நிறுவனமே அதிகாரப்பூர்வாக ஹபர்லிங்க் வசதியுடன் கூடிய ஹேஷ்டேக்குகளை கொண்டுவருகிறது. ஒரு வீடியோவில் 15 ஹேஷ்டேக்குகள் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி தேடும், ஒரு சம்பவம் தொடர்பான வீடியோக்கள் மட்டுமே திரையில் வரும். உதாரணத்திற்கு ட்விட்டரில் பயன்படுத்தப்படும் ஹேஷ்டேக் போல. இதில் ஆபாச, பாலியல் தொடர்பான, அவதூறு ஹேஷ்டேக்குகளை பயன்படுத்த முடியாது. இது தற்போது சோதனை முறையில் உள்ளது. விரைவில் அனைத்து பயன்பாட்டாளர்களின் உபயோகத்திற்கும் வரும்.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close