[X] Close
JUST IN
  • BREAKING-NEWS குக்கர் சின்னம் கிடைக்காத நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுபடி பொதுச்சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் மனு
  • BREAKING-NEWS காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும்; கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் கொடுத்ததில் தவறில்லை - காங்கிரஸ் தேனி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  • BREAKING-NEWS 2ம் கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறும் தமிழகம். புதுச்சேரி உள்ளிட்ட 97 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் நிறைவு
  • BREAKING-NEWS டிடிவி தரப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவை மற்ற வழக்குகளுக்கு முன்மாதிரியாக கருதக்கூடாது என்ற ஆணையத்தின் கோரிக்கை நிராகரிப்பு
  • BREAKING-NEWS டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS பொள்ளாச்சி கொடூரம்: புகார் அளித்த பெண்ணின் அண்ணனை தாக்கிய வழக்கில் 28ம் தேதி விசாரணைக்கு ஆஜராக பார் நாகராஜனுக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.67 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்

”ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா குழுமம் மனு

vedanta-moves-ngt-to-open-sterlite-copper

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் விதிகள் அனைத்தும்  முறையாக பின்பற்றப்பட்டு வருவதாகவும் ஆலையில் இருந்து வெளியேறும் புகை அல்லது கழிவுகளால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. ஆலையின் ஒட்டுமொத்த உற்பத்தி பல்வேறு தேவைகளை நிறைவேற்றி வந்ததாகவும் ஆலை மூடப்பட்டதால் ஊழியர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வருவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது . இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. 

பின்னணி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த சில மாதங்களாக அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதாகவும், ஆலை தொடர்ந்து செயல்பட்டால் தூத்துக்குடியில் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படும் எனவும் அவர்கள் தெரிவித்து வந்தனர். இதனிடையே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை காரணமாக போலீசார் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பொதுமக்களின் உணர்வுகளுக்கும் கருத்துக்களுக்கும் மதிப்பு அளித்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிடப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close