[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு

புதிய தலைமுறை மீது வழக்கு: போலீஸ் விளக்கம்

the-case-against-puthiyathalaimurai-police-explanation

கோவையில் புதிய தலைமுறை சார்பில் நடந்த வட்டமேசை விவாதம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது குறித்து கோவை மாநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

பீளமேடு காவல் நிலைய சரகத்தில் உள்ள தனியார் கலையரங்கில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சி நடைபெற்றதாகவும், அதில் பங்கேற்ற இயக்குநர் அமீர் தெரிவித்த கருத்துக்கு பாரதிய ஜனதா மற்றும் அதன் சார்பு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தபோது, எதிரணியினர் கோஷமிட்டு அசாதாரண சூழல் ஏற்பட்டு, அரங்கு மேலாளர் புகார் அளித்ததாகவும் காவல் துறையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அமீரின் பேச்சால் நிகழ்ச்சியை காண வந்தோர் இருதரப்பாக பிரிந்து வாக்குவாதம் செய்ததும் களேபரம் ஏற்பட்டு, அரங்கில் நாற்காலிகள் சேதமடைந்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, அமீர் மீது சட்டப்பிரிவுகள் 153 ஏ மற்றும் 505 ஆகியவற்றில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. மேற்படி தொலைக்காட்சி நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க அரங்க மேலாளர் அளித்த புகார் அடிப்படையில் அரங்கத்தை பதிவு செய்த செய்தியாளர் மீதும், நிறுவனத்தின் மீதும் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close