[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்

தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

chennai-high-court-orders-election-commission-to-provide-basic-facilities-to-security-personnel

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், துணை ராணுவத்தினருக்கு போதிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென தலைமை தேர்தல் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பெண் காவலர்களுக்கு நடமாடும் கழிப்பிடங்கள் அமைத்து தரக்கோரி தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் கலைச்செல்வி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழ‌க்கு தொடர்ந்தா‌ர்.‌ ‌அத‌‌ன்‌ மீதான விசாரணையில் வாக்குச்சாவடிகளிலும், அருகிலுள்ள காவல் நிலையங்களிலும் போதிய வசதிகள் செய்ய திட்டமிட்டுள்ளதால் புதிதாக ஏதும் அமைக்க தேவையில்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சாலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் காவலர்களுக்காகத்தான் வழக்கு தொடரப்பட்டதாகவும், தேர்தல் ஆணையம் மேற்கொண்டு நடமாடும் கழிப்பிடங்கள் அமைக்க முடியாது என தெரிவிப்பதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் காவலர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளை செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close