[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏக்களை கடத்தியதால்தான் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தது - பி.கே.ஹரிபிரசாத்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்

''ஐஐடியில் இடஒதுக்கீடு பின்பற்றவில்லை என்றால் கடும் தண்டனை'': உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

chennai-high-court-said-do-not-follow-the-reservation-in-iit-will-be-punished

சென்னை ஐஐடியில் பேராசிரியர்கள் இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றாமல் பணி நியமனங்கள் மேற்கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் நியமனங்களில் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகக் சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த முனைவர் முரளிதரன் வழக்கு தொடர்ந்திருந்தார். ஐஐடி நிறுவன இயக்குனரான முனைவர் பாஸ்கர் ராமமூர்த்திக்கு எதிராக இந்த வழக்கு தனி நீதிபதி அமர்வில் தள்ளுபடி செய்யப்பட்டது. 

இதையடுத்து முரளிதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேலும் கூடுதலாக மற்றொரு மனுவையும் தாக்கல் செய்தார். அந்த மனுவில், 'ஐஐடி இயக்குனராக முனைவர் பாஸ்கர் ராமமூர்த்தியை நியமித்தது செல்லாது என்றும் நான் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போதே, ஐஐடி நிறுவனத்தில் பல்வேறு பதவிகளை பாஸ்கர் ராமமூர்த்தி நிரப்பியுள்ளார். தற்போதும் பலரை நியமிக்கிறார். அதுவும், இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றால், இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. பேராசிரியர்கள் பதவிகளுக்கு பொது விளம்பரம் எதுவும் கொடுக்காமல், இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல், ஆட்களை நியமித்துள்ளார். எனவே, இந்த நியமனங்களை ரத்து செய்து, சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது’ என்று கோரியிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி தண்டபாணி அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், 'பேராசிரியர் பணியிடங்களை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை செயலாளர், இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றி நிரப்பிக் கொள்ளலாம். ஆனால், அந்தப் பணி நியமனம் என்பது இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது. ஒருவேளை இந்தப் பணி நியமனம், இடஒதுக்கீட்டு கொள்கையை பின்பற்றாமல் மேற்கொள்ளப்பட்டால், அது கடுமையான தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று நீதிபதிகள் எச்சரித்து, இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றாமல் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து வழக்கு விசாரணையை வருகிற ஜூன் 6-ந்தேதிக்கு  ஒத்திவைத்தனர்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close