[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

காவிரி நீர் கேட்டு சித்தராமையாவுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

cm-palanisamy-letter-to-karnataka-cm

தமிழகத்தின் பயிர் சாகுபடிக்காக குறைந்தபட்சம் 15 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், மேட்டூர் அணையில் தற்போது 21.27 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த நீர் இருப்பு பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்குப் போதாது என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் கர்நாடகாவில் ஏறக்குறைய பயிர் சாகுபடி நிறைந்துவிட்டதாக கூறியுள்ள முதலமைச்சர் பழனிசாமி, அங்குள்ள 4 அணைகளிலும் 49.82 டிஎம்சி தண்ணீர் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

எனவே தமிழகத்தின் நலன் கருதி, தமிழகத்திற்குத் திறந்துவிட வேண்டிய காவிரி நீரை 2 வாரத்தில் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ள முதலமைச்சர் பழனிசாமி, தற்போது உடனடியாக 7 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் கடிதத்தில் சித்தராமையாவுக்கும், கர்நாடக மக்களுக்கும் முதலமைச்சர் பழனிசாமி தனது மகரசங்கராந்தி வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close