[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

மணல் கொள்ளையில் திமுக, அதிமுக இரு கட்சிகளுக்கும் முழுப்பங்கு உண்டு - விஜயகாந்த்

vijayakanth-about-sand-quarry

மணல் கொள்ளை அடிப்பதில் திமுக, அதிமுக இரு கட்சிகளுக்குமே முழுப்பங்கு உண்டு. மூன்று வருடம் கழித்து தான் மணல் அள்ளுவதை முற்றிலும் தடுக்க முடியும் என்று சொல்லுவதை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது என்று தேமுதிக தலைவர் கூறியுள்ளார்.

தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் மூன்று ஆண்டுகளில் முற்றிலும் மணல் அள்ளுவதை தடை செய்யப்படும் என்றும், தமிழக அரசே மூன்று ஆண்டுகளுக்கு மணல் குவாரியில் இருந்து சப்ளை செய்யும் என்று அறிவித்திருப்பது மக்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணல் கொள்ளை அடிப்பதில் திமுக, அதிமுக இரு கட்சிகளுக்குமே முழுப்பங்கு உண்டு. மூன்று வருடம் கழித்து தான் மணல் அள்ளுவதை முற்றிலும் தடுக்க முடியும் என்று சொல்லுவதை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது.

ஜெயலலிதா ஆட்சி காலத்திலும், திமுக ஆட்சி காலத்திலும் மணல் கொள்ளை மிக அபரீதமாக நடந்ததன் விளைவுதான் இன்றைக்கு தமிழகம் முழுவதும் குடிதண்ணீர் இல்லாமலும், விவசாயம் செய்ய முடியாமலும் சுமார் 400 பேருக்கு மேல் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதும், அனைத்து ஊர்களிலும் பெண்கள் குடிதண்ணீர் இல்லாமல் சாலை மறியலில் நிற்ககூடிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

அதற்கு எடப்பாடி பழனிச்சாமி மூன்று வருடம் மணல் அள்ளுவதை தடுத்தால் தான் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பது வெட்டவெளிச்சமாக உள்ளது.

மணலுக்கு பதிலாக எம்சண்டு உபயோகப்படுத்த வேண்டும் என்று இப்பொழுது சொல்லுவது கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்கிற பழமொழிக்கு ஏற்ப தமிழகத்தில் மணல் இருக்கிற பெருவாரியான இடத்தில் அள்ளி முடித்து விட்டு, முதலமைச்சர் முதல் கவுன்சிலர் வரை மணல் கொள்ளை அடித்து இன்றைக்கு தமிழகத்தையே பாலைவனமாக மாற்றிவிட்ட பிறகு நல்லவர்கள் போல் பேசுவது ஒட்டு மொத்த மக்களை ஏமாற்றும் செயலாக உள்ளது.

மூன்று வருடம் கழித்து மணல் அள்ளுவதை முற்றிலும் தடுக்கப்படும் என்று சொல்வதை விட்டுவிட்டு, உடனடியாக மணல் ஆளுவதை தடுத்து, தமிழகத்தை வறட்சியில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close