[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் எக்மோ சிகிச்சை முறை...

chief-minister-jayalalithaa-offered-iciemo-treatment

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எக்மோ என்ற கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எக்மோ சிகிச்சை:

ஒருவருக்கு இதயத்தின் செயல்பாடு நின்றுபோகும் நிலையே மருத்துவ ரீதியாக கார்டியாக் அரெஸ்ட் என்றழைக்கப்படுகிறது.

அத்தகைய சிக்கலான நிலைதான் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இ.சி.எம்.ஓ. என சுருக்கமாக அழைக்கப்படும் EXTRA CORPOREAL MEMBRANE OXIGENATION முறையில் தான் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஒருவருக்கு இதயமும், நுரையீரலும் செயல்படாத நிலை ஏற்படும் போது செய‌ற்கையாக பிராண வாயுவை செலுத்துவதற்கான வழிமுறையே இந்த சிகிச்சையாகும். இதயத் துடிப்பு தடைபடும் நிலையில் இறுதி முயற்சியாக மருத்துவர்கள் மேற்கொள்ளும் நவீன சிகிச்சைகளில் இதுவும் ஒன்றாக உள்ளது. இதயம் மற்றும் நுரையீரல் இயற்கையாகவே கரியமில வாயு எனப்படும் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றி ஆக்சிஜனை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் இவ்விரு உறுப்புகளுக்கும் பிராண வாயு செலுத்தப்பட்டு உயிரைக் காப்பாற்ற முயற்சிக்கப்படுகிறது. மேலும் இரத்த சிவப்பு அணுக்களில் செயற்கையாக கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றி ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது. ஒருவருக்கு இதயம் மற்றும் நுரையீரலின் செயல்பாடுகள் முற்றிலும் தடைபடும் நிலையிலேயே அதிகபட்ச சிகிச்சை முறையாக இ.சி.எம்.ஓ. பயன்படுத்தப்படுவதாக மருத்துவக் குறிப்புகளில் இருந்து தெரிய வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close