[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS 5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்
  • BREAKING-NEWS காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்

ட்விட்டரில் கோலோச்சிய சென்னை சூப்பர் கிங்ஸ்: முதலிடம் பிடித்த தல தோனி

csk-most-talked-about-team-on-twitter

ஐ.பி.எல். கோப்பையை மும்பை அணி வென்றாலும், ட்விட்டரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்தே அதிகம் பகிரப்பட்டுள்ளது. வீரர்களைப் பொருத்தவரையில், சென்னை கேப்டன் "தல" தோனி, அதிகம் ட்விட் செய்யப்பட்டவராக முதலிடம் பிடித்துள்ளார்.

கடந்த மார்ச் 23 ஆம் தேதி தொடங்கிய 12-வது ஐ.பி.எல். தொடர், மே 12 ஆம் தேதி நிறைவடைந்தது. மிகவும் விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி 4-வது முறையாக கோப்பையை‌ கைப்பற்றியது. நடப்பு ஐ.பி.எல். தொடரின்போது, சமூகவலைதளமான ட்விட்டரில், ரசிகர்கள், வீரர்கள், அணி உரிமையாளர்கள் தெரிவித்த கருத்துகள் குறித்த விவரங்களின் தொகுப்பு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி மார்ச் ஒன்றாம் தேதி முதல் மே 13 ஆம் தேதி வரையிலான காலத்தில், ஐ.பி.எல். குறித்து 2 கோடியே 70 லட்சம் ட்விட்கள் பதிவிடப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, 44 சதவீதம் அதிகமாகும். வீரர்களைப் பொருத்தவரையில், சென்னை கேப்டன் தல தோனி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலியும், 3-வது இடத்தில் மும்பை கேப்டன் ரோஹித் சர்மாவும் உள்ளனர்.

தோனி குறித்த ஹர்திக் பாண்டியாவின் ட்விட், தொடரின் சிறந்த ட்விட்டாக சிறப்பிடம் பெற்றுள்ளது. சென்னையில் மே 7 ஆம் தேதி நடைபெற்ற முதலாவது தகுதிச்சுற்று போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, ஹர்திக் பாண்டி‌யா தோனியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டதோடு, ''எனது முன்மாதிரி, எனது நண்பர், எனது சகோதரர், எனது ஜாம்பாவான்'' என தோனியை குறிப்பிட்டிருந்தார். பாண்டியாவின் இந்த ட்வீட் 16 ஆயிரம் பேரால் ரீ ட்விட் செய்யப்பட்டுள்ளது.

ரசிகர்களிடையே அதிகம் விவாதிக்கப்பட்ட போட்டியாக, சென்னை மும்பை இடையேயான இறுதிப்போட்டி முதலிடம் பிடித்துள்ளது. இதில் மும்பைக்கு ஆதரவாக 63 சதவிகிதம் பேரும், சென்னைக்கு ஆதரவாக 37 சதவிகிதம் பேரும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். இறுதிப்போட்டியில், மும்பை அணி கோப்பையை வென்றாலும், ட்விட்டரில் கோலோச்சியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான். இதில் மும்பைக்கு இரண்டாமிடமும், கொல்கத்தா அணிக்கு மூன்றாவது இடமும் கிடைத்துள்ளன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close