[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS 5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்
  • BREAKING-NEWS காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்

முத்தரப்பு தொடர்: பங்களாதேஷிடம் சரண்டர் ஆனது வெஸ்ட் இண்டீஸ்!

mustafizur-mushfiqur-put-bangladesh-in-the-final

அயர்லாந்தில் நடக்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் வெற்றி பெற்றது. 

அயர்லாந்து, பங்களாதேஷ், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு, ஒருநாள் கிரிக்கெட் தொடர், அயர்லாந்தில் நடந்துவருகிறது. பங்களாதேஷ்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேற்று நடந்த லீக் போட்டியில் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார்.

தொடக்க வீரர்களாக ஷாய் ஹோப், அம்ப்ரிஸ் களமிறங்கினர். அம்ப்ரிஸ் 23, பிராவோ 6, ரோஸ்டன் சேஸ் 19, ஜொனாதன் கார்ட்டர் 3 ரன்னில் பெவிலியன் திரும்ப, வெஸ்ட் இண்டீஸ்  அணி 23.1 ஓவரில் 99 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. 

இந்நிலையில், ஷாய் ஹோப் - கேப்டன் ஜேசன் ஹோல்டர் ஜோடி சிறப்பாக விளையாடி 100 ரன் சேர்த்தது. ஷாய் ஹோப், 108 பந்தில் 6 பவுண் டரி, 1 சிக்சருடன் 87 ரன்னும் ஹோல்டர்  76 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 62 ரன்னும் விளாசினர். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி, 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன் எடுத்தது. பங்களாதேஷ் பந்துவீச்சில் முஸ்தபிசூர் ரகுமான் 4, மோர்டசா 3, மிராஸ், ஷகிப் ஹசன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

இதையடுத்து, 248 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பங்களாதேஷ் அணி, 47.2 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது. அந்த அணியின் சவும்யா சர்க்கார் 54 ரன்னும் முஷிபுஹூர் ரஹிம் 63 ரன்னும் முகமது மிதுன் 43 ரன்னும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் நர்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினர். 

இந்த வெற்றியை அடுத்து இறுதி போட்டியில் இந்த அணிகள் வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் மோத உள்ளன.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close