[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

விமர்சனங்களை தாண்டி வாட்சனுக்கு வாய்ப்பளித்த தோனி -  வருத்தப்பட்ட யுவராஜ் ரசிகர்கள்

shane-watson-has-been-given-chance-continuously-in-this-ipl-even-has-criticizes

சென்னை வாட்சனுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு அளித்ததுபோல், மும்பை இண்டியன்ஸ் அணியில் யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பு அளித்திருக்க வேண்டுமென ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நடப்பு ஐபிஎல் தொடரில் பல்வேறு சீனியர் வீரர்கள் விளையாடி வருகின்றனர். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், அதேபோல், சர்வதேச போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்காத பலரும் இந்த ஐபிஎல் தொடரை தங்களது திறமையை காட்ட கிடைக்கும் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கின்றனர். 

அப்படி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத ஆஸ்திரேலிய அணியின் வாட்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இந்த ஆண்டும் தொடர்ந்து விளையாடினார். இந்த தொடர் வாட்சனுக்கு அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை. ஆனால், முழுவதுமாக அப்படி சொல்லிவிட முடியாது. ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வாட்சன் 96 ரன்கள் விளாசினார். அதேபோல், டெல்லி அணிக்கு எதிரான நேற்று நடைபெற்ற போட்டியில் அரைசதம் அடித்தார். 

               

இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை அணி பங்கேற்ற 16 போட்டிகளிலும் வாட்சன் விளையாடினார். அவர் 318 ரன்கள் எடுத்துள்ளார். பேட்டிங் சராசரி 19.87 ரன். போட்டி தொடங்கிய தருணத்தில் ஒரு போட்டியில் மட்டும் வாட்சன் 40 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு  ஒவ்வொரு போட்டியிலும் வாட்சன் சொதப்பி வந்தார். தொடக்க வீரர்களாக களமிறங்கிய அம்பத்தி ராயுடு, வாட்சன் இருவரும் தொடர்ந்து ரன் எடுக்க திணறியது சென்னை அணிக்கு சிக்கலாகவே மாறியது. ஆனால், வாட்சனை அணியில் இருந்து கேப்டன் தோனி நீக்கவேயில்லை. எல்லா போட்டிகளிலுமே அவர் தொடக்க வீரராகவே விளையாடினார். அம்பத்தி ராயுடு கூட பின்கள வரிசைக்கு தள்ளப்பட்டார். 

                

சென்னை அணியை தவர மற்ற எல்லா அணிகளிலும் பெரும்பாலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை என்றால் அவருக்கு பதிலாக மற்ற வீரரை களமிறக்கி முயற்சி செய்வார்கள். மற்ற அணியில் இருந்திருந்தால் என்னை எப்போதோ மாற்றியிருப்பார்கள் என வாட்சனே கூறியிருக்கிறார். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கூட வாட்சனுக்கு பதிலாக வேறு யாரையாவது களமிறக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக வலியுறுத்தப்பட்டது. ஆனால், வாட்சனை தோனி மாற்றவே இல்லை. தோனியின் நம்பிக்கையை வாட்சன் காப்பாற்றினார்.

வாட்சனின் நிலை இப்படி இருக்க இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த யுவராஜ் சிங்கின் நிலை பரிதாபமாக உள்ளது. மும்பை இண்டியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் யுவராஜ் சிங், இந்த தொடரில் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். 4 போட்டிகளில் 75 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதில் ஒரு போட்டியில் மட்டுமே 53 ரன்கள் எடுத்தார். மற்ற மூன்று போட்டிகளில் சேர்த்து 22 ரன்கள் மட்டுமே எடுத்தார். 

               

தொடக்கத்திலே யுவராஜுக்கான வாய்ப்பு நிறுத்தப்பட்டது. பல்வேறு விமர்சனங்கள் வந்த நிலையிலும் வாட்சனை தொடக்க வீரராகவே தோனி தக்க வைத்தார். மும்பை கேப்டன் ரோகித் சர்மாவும் அதேபோல், யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மற்றொரு தரப்பில், சென்னை அணி வெற்றி பெற்றுக் கொண்டே வந்ததால் வாட்சனுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், மும்பை அணி தொடக்கத்தில் சரிவை சந்தித்தது. ஆனால், சில மாற்றங்களை மும்பை அணி செய்ய வேண்டியிருந்தது என்று சிலர் கூறுகின்றனர்.

இருப்பினும், இந்திய அணியில் யுவராஜ் சிங்கிற்கு என ரசிகர் பட்டாளம் இன்னமும் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். யுவராஜ் குறைந்தபட்சம் இன்னும் சில போட்டிகளில் விளையாடி இருந்தால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close